Twitter feeds

Monday, December 5, 2011

குறுங்கதை

"டேய் சிவா, பொருள் வாங்கினதும் அவன போட்டுரு "
"வின்சென்ட், நாளைக்கு பொருள் சிவா கைக்கு போகக்கூடாது. உயிர்தான் போகணும்"
"டிஷ்யூம், டிஷ்யூம்"
"சரக், சரக், சரக்"
"ஏலே சிவா, எவ்வளவு நேரம் தூங்குவ, எந்திரிச்சி காபி குடிடா. ஏப்பா வின்சென்ட்டு, நீயும் இந்த காபி தண்ணிய குடி, அவன் வந்துடுவான்"

தூக்கம் வரல

அகத்தை போர்த்திய புறத் தோலை
அவிழ்த்தெறிய முடியாமல் நான்.

நல்லவனாக இருப்பதற்கும், நடிப்பதற்கும்
என்ன காரணம்?

Monday, October 17, 2011

டீத்துவம்

டீ பழக்கம் வெள்ளைக்காரன் நம்மை அடிமைப்படுத்துவதற்காக என தெரிந்தும் குடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒரு விதத்தில் பிறருக்கு அடிமைதானே ?

பிதற்றல் மீண்டும்

கனவு
விடிவதற்கு முன்பே பகலில் !!

என் வாழ்க்கை
விழித்துக்கொண்டே தூங்கி,
தூங்கிக்கொண்டே விழித்துமாய் !!

அசாதாரணமாய்
கனவில்லா தூக்கமும்
கவலையில்லா பகலும் !!

Tuesday, September 6, 2011

தேடல்

இருள் பழகித் தெரியும்
ஒளி போல்
ஒரு நாள் தெரியுமோ
நான் வந்த
காரணமும்
காரியமும் ??

புல் தின்று மேயும்
மாடும்
வாழ்வது வாழ்க்கைதான்
எனில்
நான் வாழ்வதும் தானோ ??

யாருக்கோ உழைத்து
எவருக்கோ அசைந்தும்
இசைந்தும், கழுதையும்
செய்யுமே??

என்றேனும் தெரியுமா,
என் பாதை
மின்மினிப்பூச்சியின்
வழிகாட்டலில் ???

Sunday, August 7, 2011

Rage and discontent

One of these days you get the feeling that everything in the world is going against you and yet you can do nothing about it. All these years you live up believing that things will eventually change and all you witness is 'live to see another day'. I wish I was the guy Bradley Cooper played in Limitless and have that magic pill. But I say to myself, "Pull yourself together. Life is not fantasy. It is pain". Dreams are the sedatives that help you ease this pain. What you see in the mirror is the image or rather the mirage that you always wanted to see but what others do is a different you; that is in most cases not your imaginative mirage but the real image.

There are vents in human body to excrete unwanted by-products but there is none to spit out rage and frustration.

I'm not an atheist but the next time you pray to God just remember that faith is just one of those sedatives. You will not witness a divine intervention. No other person would be more happier than me if I am proven wrong. I may regret writing this later however at the moment I feel this is the truth.

I am not afraid of a fight but all I want is it to be fair. I may fail terribly but I would be happy that I tried.


Sunday, July 31, 2011

தி மு க

அடுத்த தடவை , தி மு க செயற்குழுவை சேலம் ஜெயிலிலேயும்
பொதுக்குழுவை திகார் ஜெயிலிலேயும் தான் கூட்டனும் போலிருக்கு !!! நல்ல வேளை அண்ணா உயிரோடு இல்லை.

தேகம்

சாரு நிவேதிதாவின் தேகம் நாவலை படித்துவிட்டு, என் நண்பன் போனில் கதறிய பொழுதுதான், "எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதே நிலைமை தான்" என அறிந்து ஆறுதலடைந்தேன்.

தேகம் படிச்சுட்டே இவ்வளவு புலம்புரானே, இவன எல்லாம் ஜீரோ டிகிரி படிக்க வெச்சா என்ன ஆவான் ?

எவன் இவன்

மணிரத்னம் ராவணனில் ஏமாற்றியது போல் பாலா அவன் இவனில் ஏமாற்றிவிட்டார்..

தேவையில்லை

உயிரற்றவைகள் பயப்படுவதில்லை !!!!

Thursday, July 7, 2011

villains of the century

I remember, reading an article in TOI.

"Conspiracy in death of great villains of the 20th century. List includes Adolf hitler, saddam hussain and at last Veluppillai Prabhakaran..".

F..k man. These guys unable to differentiate between terrorists and freedom fighters. If prabakaran is being called as terrorist, what about subash chandra bose, bhagat singh? How can you resist writing this, when u watch an horrible video footage of killing of people in Eezham?

Monday, June 27, 2011

சிலப்பதிகாரம்

பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுது உணர்ந்தாரே.

தமிழ்நாடும், மக்களும்

ரஜினிகாந்த் உடல் நிலை சரியில்லை என்றதும் லட்சக்கணக்கான மக்கள் கவலைப்படுகிறார்கள், பூஜை செய்கிறார்கள். ஆனால் ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டபோது, ஏதும் நடக்காதது போல் இருக்கிறார்கள். சுஜாதா சொன்னது நினைவிற்கு வருகிறது, " தமிழகத்தின் தலை இருபதாம் நூற்றாண்டிலும், வால் இரண்டாம் நூற்றாண்டிலும் உள்ளது".....

Wednesday, May 11, 2011

Five facts to learn from Fast Five

I got to know a few important facts from the recent Hollywood flick Fast Five:

1. A pregnant lady can jump roof tops and land hardly without causing any harm to her embroyo. So don't be afraid to try some skydiving with your pregnant lady.

2. A billionaire who supposedly runs a whole country would keep all his money in a safe as hard cash. Feeling bored? Come let us rob some billionaire's safe.

3. You can get a full palm print from a bikini bottom. If your palms open secure safes do not be tempted to touch some hot ass. On a second thought, atleast wear a pair of gloves always.

4. If you are film editor and you want to slow down the pace of the movie between consecutive scenes, introuduce an aerial long shot even if it is unnecessary. Well, 9 out of 10 times, it is unnecessary but it does serve the purpose. It gives a breathing space for a viewer to realize that he has been eating popcorns from the other person who's holding it.

5. A cool dude like Vin Diesel doesn't prefer to wear a shirt even after stealing millions.

Saturday, May 7, 2011

Some music and some lightning.

Not everyone feels the same way about being alone. Honestly I feel a lot good when I'm left in solitude. It's a preference not a choice. I do not want to bother wondering if it's right or wrong.

Everyone around me is probably (hopefully) sleeping right now (2 am). I'm out there in the balcony of a house in a city both of which are not much known to me. Incidentally my shuffle chose, to begin with, a song in which the night life is expressed in joy. The clouds up there are busy discharging some of their electronic charge in the form of lightning. I look around and wonder if some other nocturnal human life, like me, is up to something in all those (very few houses) whit lights switched on.

The pine trees around are lifeless. Seems it might take quite a bit of wind to shake them up. Suddenly I remember my botany teacher of class sixth that tried to shed some light about gymnosperms. You always remember the weirdest thing about the people you know; doesn't matter good or bad and this person used to warn us that that if we were to see him outside other than school we better get home as fast as we can because he said "as you know that I have access to the biology lab where samples of some dangerous viruses exist, I might very well be spreading them in those places where you see me!". Thus intriguing and society aware most our teachers were and unfortunately still are. I once got to see him in a temple and I was sure he wasn't spreading any such harm, not because I found he had faith in God but because he was with his family.

Saturday, April 23, 2011

இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள் - ஒரு பார்வை

தமிழில் நான் படிக்கும் முதல் அங்கத நாவல் (நடப்பு நிகழ்வுகளை மிகைப்படுத்தி நகைச்சுவையுடன் எழுதுவது). விகடனில் இரண்டு பக்கத்திற்கு வரும் அங்கத்தைப் படித்து ரசிப்பேன். சோ அவர்களின் "வாஷிங்கடனில் நல்லதம்பி" என்கிற நாவலை கல்லூரி நாட்களின் பொழுது படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். அதன் பிறகு படித்த (நகைச்) சுவையான நாவல்.

கதைக்களத்தில் சினிமா நடிகர் வேதபுரத்தின் முதல்வராகவும், அவரைத் தொடர்ந்து வேதபுரத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டுப்பெண் வேதபுரத்தின் ராணியாகவும் ஆவதைக் கொண்டு கதாப்பாத்திரங்கள் யார் யாரென நாம் யூகித்து கொள்ளலாம். அதை வலுப்படுத்தும் விதமாக சில இடங்களில் "புரட்சித் தலைவர்", "இதய தெய்வம்" போன்ற வார்த்தைகள் இடம் பெறுகின்றன.

அரசியல் என்பது "புரியாத புதிர்" என்பதும் இந்நாவல் படித்தபிறகு புரியும். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் கொடுக்கப்படும் பஞ்ச் வார்த்தைகள் மிகவும் அருமை.
1 . "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்பே கையில் கால்ஷீட்டுடன் தோன்றிய கதாநாயகிகளும்.... வேதபுரம்" (பழைய கல்வெட்டிலிருந்து.... நடுவில் எழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளன (காலம் ஜெ.மு.௨௦௦௦௭)
2 . "நாற்பதினாயிரம் நூற்றாண்டுகளாக எந்த வித மாறுதலுமில்லாமல் அப்படியே இருந்து வருவதுதான் வேதபுரத்து நாகரிகத்தின் சிறப்பு!" ( வேதபுரத்து பண்பாடு - ஆசிரியர்: ஞானமூலப் பண்டிதர் (பக்.173 -174 )

கதை போகிற போக்கில் வருகிற பஞ்ச் வார்த்தைகள் சுற்றத்தை மறந்து சிரிக்க வைக்கின்றன. உ.ம்.
"இவர் என்ன அமைச்சர்? எந்த துறை? "
"படித்துறை!"

வேதபுரத்தின் மக்கள் அரசியல் தலைவர்களையும் சினிமா நடிகர்களையும் தெய்வமாக மதிப்பதை சாடித்தள்ளுகிறார் நகைச்சுவையுடன்.

எளிய தமிழில் ஓர் சிறந்த படைப்பு. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன் போன்றோர்களின் நாவல்களை படிக்க நம்மை நாமே சிறிது தயார் செய்து கொள்ள வேண்டும், படித்த பிறகு ஏற்படும் சிந்தனைகளைத் தாங்கக்கொடிய மனப்பக்குவமும் தேவைப்படும்; அவர்களின் வட்டார வழக்கும் திகைக்க வைக்கும். நகைச்சுவையுடன் ஒரு கதையை சொல்லியும் தாகத்தை ஏற்படுத்த முடியும் என நிரூபித்துள்ளார்.

விரைவில் இவரின் மற்ற நூல்களையும் படித்து முடிக்க வேண்டும்.

Saturday, April 9, 2011

வேண்டாம் சேகர், ப்ளீஸ்!

சேகர் "டிஸ்கவரி" சேனலின் ஒரு நிகழ்சிக்காக யாரும் சென்றிராத அமேசன் காட்டுப் பகுதிக்கு தன் குழுவினருடன் சென்றிருந்தான். சிறிய பாம்பு ஒன்று அவன் காலை சுற்றிக்கொண்டது. தற்காப்பிற்காக துப்பாக்கியை அந்த பாம்பிற்கு எதிரே நீட்டினான். அந்த பாம்பின் வயிற்றுள் இருக்கும் பூமி என்னும் சிறு கிரகத்திலிருந்து நான் இந்த கதையை எழுதிக் கொண்டிருப்பது தெரியாமல்.

அதிகாலை பொழுதும், மங்கள் ஏரி பார்க்கும்...

கதை எழுதும் பொழுது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய பாத்திர அமைப்பு, காலம், பொருள் எவையும் கட்டுரை அல்லது சுய அனுபவம் குறித்து எழுதும் பொழுது தேவைப்படுவதில்லை என்பது ஒரு விதத்தில் சுதந்திரம் தான். ஆனால் எதையும் 100% உண்மையாக எழுத முடியாது, சிறிதளவேனும் கற்பனை கலந்து விடும் அல்லது சில விடயங்கள் தவிர்க்கப்படும் என்ற சுஜாதாவின் கூற்று உண்மைதான். சம்பவங்கள் நம்மால் மிகைப்படுத்தப்பட்டு சுவாரஸ்யப்படுதப்படுகின்றன. சிறு சம்பவங்களுக்கே இந்த நிலைமை என்றால் வரலாற்றை யோசித்தால் சிறிதே கலக்கம் ஏற்படுகிறது.

நிடம் போல் இன்று கொசுக்களையும் புழுக்கத்தையும் சகித்துக்கொண்டு தூங்க முடியவில்லை. அதிகாலை 3 மணிக்கே விழித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. சற்றே யோசனைக்குப் பிறகு, சரஸ்வதி தேவியை தவிர்த்து விட்டு, நித்திரா தேவியிடமே சுமார் 1 நாழி மல்லு கட்டி தோற்றேன். வீட்டருகில் ஏதேனும் தேனீர் கடை திறந்திருக்குமென எத்தனித்து தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். "முயற்சி திருவினையாகும்" , வள்ளுவன் வாக்கும் பொய்ததுண்டோ காலங்கள் கோடி கடப்பினும். தேனிருக்கு பிறகு, பஸ் பிடித்து மெரினா வரை செல்லலாம் என்ற யோசனையை தவிர்த்து விட்டேன். தமிழுக்கு ஒரு எழுத்தாளன் தேவையன்றோ !!!.

சற்று தூரம் நடந்த பிறகு " கண்டேன் மக்களை", எறும்பென அதிகாலை வேறெங்கு காண இயலும், மங்கள் ஏரி பூங்கா. எதைப் பற்றியும் சிந்திக்காமல் நடக்க வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்தேன். சும்மாவா சொன்னார்கள், " மனம் ஒரு குரங்கு". அக்கரையில் இருப்பவர்கள் நினைவு ஏனோ வர, எனது ipod -லும் "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டோழிய" என்ற பாடல் shuffle -ல் வந்ததும் எதேச்சியாக இருக்குமோ அல்லது உண்மையில் மனதுக்கு தான் உலகத்தையே கட்டுப்படுத்தும் சக்தியும் உண்டோ பராசக்தி ???

என் போக்கில் கைகளை ஆட்டிக்கொண்டு நடந்தேன். அதோ அங்கொருவர் குனிந்துகொண்டே கைகளை மட்டும் மேலே நீட்டிக்கொண்டு தலை பூமி பார்த்து எதோ வேற்று கிரகத்து ஜீவன் போல் வரும்பொழுது, நான் என் போக்கில் கைகளை பிரயோகிக்க கூடாதா என்ன?

பிறகு நேற்று இரவு படித்த நாஞ்சில் நாடனின் கதைகளை அசைப்போட்டுக் கொண்டே.. என்னையும் முந்திவிட்டு முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் பெண் சற்று நேரத்தில் பூமியை விட்டே பறந்து விடுவாள் என தோன்றியது. பரவாயில்லை, அவள் பூமியில் ஆக்கிரமித்து இருக்கும் இடத்தில, என் போன்றவர்கள் இரண்டு பேர் இருக்கலாம்...... ஆம் நாஞ்சிலுக்கு திரும்ப வேண்டும். எழுத்தாளன் தான் வாசகனை எவ்வாறு மாற்றி விடுகிறான்?! வாசகனையும் அவன் போக்கிலே சிந்திக்க வைத்து விடுகிறான். கல்கி சரித்திர நாவல் எழுத தூண்டியது போல், சுஜாதா அறிவியல் புனை கதைகள், புதுமைபித்தன், நாஞ்சில் நாடன் எதார்த்தங்களையும் எழுத சொல்கிறார்கள் அல்லது எல்லா களத்தையும் அது போல் பார்க்க தூண்டிவிடுகிறார்கள். நா. நா-ன் தன்ராம் சிங் கதையை படித்த பிறகு கூர்க்கா-விற்கு காசு கொடுக்காமல் நகர தோன்றாது.

இன்னும் ஏதேதோ யோசனைக்கு பிறகு பூங்காவை எத்தனை முறை சுற்றி வந்தோம் என்ற கணக்கு தெரியவில்லை. எண்ணிப் பார்த்தால் எண்ணிக்கை முக்கியம் அல்ல என்றே தோன்றியது.

Saturday, March 12, 2011

ஊழ்வினை

இவை அனைத்தும் எப்பொழுது தொடங்கியன என தெரியவில்லை, அன்றொரு நாள் தூக்கம் இல்லாமல் என் அலைபேசியில் நேரம் பார்த்த பொழுதிலிருந்து இருக்கக் கூடும். நேரம் 00.00 (ரயில்வே நேரம்). பின் நிறைய சந்தர்ப்பக்கங்களில் இது போன்ற அசாதாரண எண்களை எதிர் கொள்ள நேரிட்டது. ௨௧.௨௧.௨௨.௨௨. இன்று மீண்டும் 00.00. அத்துடன் அலைபேசியில் நேரத்தை ௧௨ மணி அமைப்பிற்கு மாற்றி விட்டேன். இப்பொழுது நேரம் காலை ௧௨.௧௨.

தற்சமயம் எனக்கு வேண்டியதெல்லாம், இருள்சூழ்ந்த, குறட்டை சப்தம் உட்பட ஏதும் இல்லாத, தனிமையான, விசாலமான, காற்றோட்டமிக்க ஒரு இடம், பஞ்சனையுடன்.